ஆகஸ்ட் 31 காலக்கெடுவுக்கு பின்னரும் ஆப்கானிலிருந்து வெளியேறுவோருக்கு ஜி-7 மாநாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம்

By Vishnu

25 Aug, 2021 | 09:42 AM
image

ஆகஸ்ட் 31 காலக்கெடுவுக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவோருக்கு தலிபான்கள் பாதுகாப்பான வழியைக் கொடுக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கோரியுள்ளார்.

ஜி-7 தலைவர்களின் அவசர மெய்நிகர் சந்திப்பைத் தொடர்ந்து, போரிஸ் ஜோன்சன் "கடைசி நேரம் வரை" நாட்டிலிருந்து மக்களை வெளியேற்றுவதை இங்கிலாந்து தொடரும் என்று உறுதியளித்தார்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் விமானம் மூலம் வெளியேற்றப்படலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வருகை இல்லாமல் ஆகஸ்ட் 31 க்குப் பிறகு ஆப்கானை விட்டு அனைவரையும் வெளியேற்ற முடியாது என்று எச்சரித்த பிரிட்டன் உட்பட ஜி-7 தலைவர்களில் பலர், வீரர்களை திரும்பப் பெறுவதை தாமதப்படுத்துமாறு அமெரிக்காவை வலியறுத்தினர்.

எனினும் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் தனது பணியை முடிக்க அமெரிக்கா முழு மூச்சுடன் செயற்படுவதாக இந்த சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.

90 நிமிட காணொளி மாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் ஜி-7 தலைவர்கள், ஆகஸ்ட் 31 காலக்கெடுவுக்குப் பிறகும் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆப்கானியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதே தங்களின் உடனடி முன்னுரிமை என்று கூறினர்.

இந்த சந்திப்பில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய ஜி-7 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரியாவில் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த கைக்குழந்தை...

2023-02-06 22:00:36
news-image

இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்ட உறவுகளை மீட்பதற்காக...

2023-02-06 21:19:37
news-image

மீட்புபணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை துருக்கியை தாக்கிய இரண்டாவது...

2023-02-06 20:38:26
news-image

சிரியா துருக்கியில் 12 மணித்தியாலங்களின் பின்னர்...

2023-02-06 19:58:52
news-image

துருக்கி பூகம்பத்தினால் துருக்கி, சிரியாவில் 1,470...

2023-02-06 16:48:57
news-image

எனது குடும்பம் முழுவதும் இறந்துவிடும் என...

2023-02-06 16:11:35
news-image

பலஸ்தீனியர்கள் ஐவர் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர்

2023-02-06 15:15:12
news-image

சீனாவை எதிர்கொள்ள பிலிப்பைன்ஸில் அமெரிக்க பாதுகாப்புத்...

2023-02-06 14:55:49
news-image

'காஷ்மீர் ஒற்றுமை தினம்' இந்தியாவே இலக்கு

2023-02-06 15:28:47
news-image

பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர்...

2023-02-06 13:37:11
news-image

அதானி விவகாரம் | நாடு தழுவிய...

2023-02-06 12:53:10
news-image

பிரான்ஸில் வீடொன்றில் ஏற்பட்ட  தீயினால் பெண்ணொருவரும்...

2023-02-06 12:53:14