மங்கள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உபயோகித்து கிடையாது - ஜே.வி.பி

By T Yuwaraj

24 Aug, 2021 | 10:12 PM
image

(செய்திப்பிரிவு)

கொவிட் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உபயோகித்து கிடையாது. 

அரசியலில் சுதந்திர சிந்தனையைக் கொண்ட அவரால் , அரசியல் நெருக்கடிகளிலும்கூட தனது கொள்கைகளை கடைபிடிக்க முடிந்தது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜே.வி.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நாட்டில் இடம்பெற்ற சில தீர்க்கமான அரசியல் நிகழ்வுகளின் போது அவர் எம்முடன் நேரடியாக செயற்பட்டமை தொடர்பில் நினைவுகூர்கின்றோம்.

அவரது இழப்பால் துயரடைந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட சகலருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right