(செய்திப்பிரிவு)

இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றங்களையும் திருப்புமுனைகளையும் ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு கவலையளிப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது இரங்கல் செய்தியில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றங்களையும் திருப்புமுனைகளையும் ஏற்படுத்தி, இலங்கை மக்களுக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கத் தீவிரமாகப் பங்களித்தவர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆவார்.

நன்றியுள்ள அரசியல்வாதியாகத் திகழ்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு, நான் மிகவும் வருந்துகிறேன்.

அவரது மறைவுக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.