ஜனநாயக அரசியலின் இலட்சினையாக செயற்பட்ட மங்களவின் மறைவு ஈடு செய்ய முடியாதது - பிரதமர் 

Published By: Digital Desk 4

24 Aug, 2021 | 10:09 PM
image

ஜனநாயக அரசியலின் இலட்சினையாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு ஈடு செய்ய முடியாதது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு லிபரல்வாதியாகவே இவர் அரசியலில் செயற்பட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

வின் மறைவு ஈடு 

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நினைவுகளை மீதமாக்கிய  செயற்பாட்டு ரீதியிலான அரசியல்வாதியான  முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறப்பு செய்தியை கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். 

1983 ஆம் ஆண்டு லண்டன் புனித மெட்னஸ் பல்கலைக்கழகத்தில் முதல் பட்டதாரியாக பட்டம் பெற்றதன் பின்னர் இலங்கைக்கு வந்த மங்கள சமரவீர  அரசியலுக்கு முதன் முறையாக வரும் வரை  நெருங்கிய நண்பராகயிருந்தார்.

 1988ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தொகுதி அமைப்பாளராக  தெரிவு செய்யப்பட்ட மங்கள சமரவீர 1989 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாராளுமன்றிற்கு முதன் முறையாக தெரிவானார். உரிமை மற்றும் நீதி ஆகியவற்றை  கோரி போராடிய சமூக ஜனநாயகவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மங்கள சமரவீர அரசியலில் செயற்பட்டார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிப் பெறுவதற்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறக்க முடியாது.

ஜனநாயக அரசியலில் மறக்கமுடியாத இலட்சினையாக செயற்பட்ட முன்னாள் அமை;ச்சர் மங்கள சமரவீரவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37