இலங்கை அரசியலில் புரட்சியை முன்னெடுத்தவர் மங்கள - சிறிலங்கா சுதந்திரக் கட்சி அனுதாபம்

By T Yuwaraj

24 Aug, 2021 | 09:09 PM
image

இலங்கை அரசியலில் அரசியல் புரட்சியொன்றை முன்னெடுத்த மங்கல சமரவீர நாட்டுக்கு சிறந்த முன்மாதிரியானவர். அவரின் மறைவு பேரிழப்பாகும் என சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சிக்கு அதன் இளைஞர் முன்னணி விடுத்துள்ள சவால் | Virakesari.lk

முன்னாள் அமைச்சர் மங்கல சமரவீரவின் மறைவை முன்னிட்டு சிறிலங்கா சுதந்திர கட்சி விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலுக்கு பிரவேசித்து, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக செயற்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மங்கள சமரவீரவின் திடீர் மறைவினால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடுபத்தினர், அவர் ஆதரித்து வந்த மாத்தறை மாவட்ட மக்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அனுதாபங்பங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right