பதுளை விகாரகொட பாலத்திற்கு அருகிலிருந்து கை குண்டு ஒன்று பதுளை பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த கை குண்டானது பதுளு ஓயாவிலிருந்து இன்று (10) மீட்கப்பட்டுள்ளது.

நீராடச்சென்றவர்கள் கொடுத்த தகவலுக்கமைய குறித்த கை குண்டினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் கை குண்டை பதுளை நீதிமன்ற உத்தரவின் பேரில் பதுளை பொலிஸார் செயலிழக்கச் செய்துள்ளனர்.