சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகளுக்காக வாதிட்ட முக்கிய அரசியல் பிரமுகரே மங்கள - தனக்கும் பாரிய இழப்பு என்கிறார் ரணில்

Published By: Digital Desk 4

24 Aug, 2021 | 08:52 PM
image

(செய்திப்பிரிவு)

மங்கள சமரவீர இலங்கையில் ஒரு நம்பகமான மற்றும் நிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அனைவரினதும் சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் முன்னின்று செயற்பட ஒரு முக்கிய அரசியல் பிரமுகராவார் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு தேசிய ரீதியிலும் ஐக்கிய தேசிய கட்சியும் தனிப்பட்ட ரீதியில் எனக்கும் பாரிய இழப்பாகும்.

கடந்த தினங்களில் அவருடன் தொலைபேசியில் உரையாடிய போது ' நீங்கள் விரைவாக குணமடைந்து திரும்புவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றேன் என்று கூறினேன். எனினும் அது நடக்கவில்லை. கொவிட் வைரஸ் அவரது உயிரையும் பறித்து விட்டது.

மங்கள சமரவீர இலங்கையில் ஒரு நம்பகமான மற்றும் நிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அனைவரினதும் சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் வாதிட்ட ஒரு முக்கிய அரசியல் பிரமுகராவார்.

அவர் கட்டமைப்புக்களுக்கு உட்படாமல் புதுமையான யோசனைகளைக் கொண்டு வந்தவர்.

மங்கள சமரவீர எம் அனைவர் மத்தியிலும் நல்லிணகத்தை தோற்விப்பதற்காக பாடுபட்ட முன்னோடியாவார்.

2015 - 2019 காலப்பகுதியில் அமைச்சரவையில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் நிதி அமைச்சு பதவிகளை வகித்து முக்கிய சேவையை ஆற்றியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை...

2023-12-07 17:37:22
news-image

ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியுடன்...

2023-12-07 17:57:20
news-image

முல்லை. கரியல் வயல், சுண்டிக்குளம் பிரதேசவாசிகள்...

2023-12-07 17:44:58
news-image

வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எமது வளங்களை...

2023-12-07 16:44:34
news-image

தலவத்துகொட கிம்புலாவல வீதியோர உணவு கடைகளை...

2023-12-07 16:58:52
news-image

சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், பொது மக்கள்...

2023-12-07 16:51:10
news-image

கொடிகாமம் வீதியில் இளைஞரை தாக்கிவிட்டு, வீடு...

2023-12-07 15:36:45
news-image

பொல்கொட ஆற்றில் குதித்து உயிருக்குப் போராடியவர்...

2023-12-07 15:37:57
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-07 15:10:59
news-image

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் விற்பனை...

2023-12-07 15:14:49
news-image

ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை

2023-12-07 14:40:24
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான்...

2023-12-07 14:17:35