டோக்கியோ 2020 பராலிம்பிக் ஆரம்பம்

Published By: Digital Desk 2

24 Aug, 2021 | 04:48 PM
image

உலகின் 162 நாடுகளைச் சேர்ந்த 4,400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல்களை வெளிக்கொணரும் டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழா இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு  தொடக்க விழாவுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

கொரோனா தொற்று நோய்த் தாக்கத்தால் ஒரு வருடம் தாமதிக்கப்பட்ட பராலிம்பிக் விளையாட்டு விழா, ஜப்பானில் புதிதாக தொற்று பரவிவரும் நிலையில் இன்று ஆரம்பமாகியுள்ளது. 

இவ்வாறான நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் செயற்கை கால்கள், செயற்கை கைகள் மற்றும் இன்னோரென்ன குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் உலக சாதனைகளை முறியடிக்கும் நம்பிக்கையுடன் இன்று முதல் எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதிவரை பராலிம்பிக் அரங்குகளில் ஆற்றல்களை வெளிப்படுத்தவுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் சாதனைகள் படைத்தாலும் படைக்காவிட்டாலும் இத்தகைய உன்னதம்வாய்ந்த போட்டிகளில் பங்குபற்றுவது எல்லாவற்றுக்கும் மேலான சாதனையாக அமையும் என்பது உறுதி.

'முன்னோக்கி நகர்வோம்' என்ற எண்ணக்கருவுடனான ஒட்டுமொத்த தகவலை உலகுக்கு வழங்கும் டோக்கியோ 2020 பராலிம்பிக் ஏற்பாட்டாளர்கள், ஆரம்ப விழாவை 'எமக்கு சிறகுகள் உண்டு' என்ற தொணிப் பொருளிலும் முடிவு விழாவை 'பன்மைத்துவ வேறுபாடுகளை பகிரப்பட்ட ஒற்றுமையாக மாற்றுதல்' என்ற தொணிப் பொருளிலும் நடத்த தீர்மானித்துள்ளனர்.

ஆரம்ப விழாவில் 75 பேரும் முடிவு விழாவில் 89 பேரும் கலை, கலாசார நிகழ்ச்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவை ஜப்பான் பேரரசர் நருஹித்தோ சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். ஒலிம்பிக் விளையாட்டு விழாவைப் போன்று பராலிம்பிக் விளையாட்டு விழாவும் பார்வையாளர்களின்றியே நடத்தப்படுகின்றது.

'பராலிம்பிக் விளையாட்டு விழாவை டோக்கியோ நடத்துவது இது இரண்டாவது தடவையாகும். எனவே இம்முறை சமுதாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர நாங்கள் விரும்புகின்றோம்' என டோக்கியோ 2020 ஏற்பாட்டுக் குழுத் தலைவர் செய்க்கோ ஹஷிமோட்டோ தெரிவித்தார்.

'அதனை எம்மால் அடைய முடிந்தால், பராலிம்பிக்ஸ் வெற்றி அளித்துள்ளது என கருதமுடியும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையைச் சேர்ந்த 9 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றுவதுடன் ஆரம்ப விழாவில் தேசிய கொடியை தினேஷ் ப்ரியன்த ஹேரத் ஏந்திச் சென்றார். 

இவர் ஆண்களுக்கான ரி46 ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

ரியோ பராலிம்பிக்கில் எவ்46 பிரிவு ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் ப்ரியன்த ஹேரத், மற்றொரு பதக்கத்துக்கு குறிவைத்து டோக்கியோ பராலிம்பிக்கில் பங்குபற்றவுள்ளார்.

இலங்கை பராலிம்பிக் அணியின் தலைவரான ஹேரத்,2017 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் 2018 ஆசிய பரா மெய்வல்லுநர் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 2019 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

இலங்கை பராலிம்பிக் அணியில் இடம்பெறும் ஏனையவர்கள்,

சமித்த துலான்: எவ்44 பிரிவு ஈட்டி எறிதல். 2019 பரா உலக மெய்வல்லுநர் போட்டியில் 4ஆம் இடம்.

சம்பத் ஹெட்டிஆராச்சி: எவ்64 பிரிவு ஈட்டி எறிதல். ஜகார்த்தா 2018 பரா ஆசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்.

பாலித்த பண்டார: எவ்42 பிரிவு: குண்டு எறிதல். ஜகார்த்தா 2018 பரா ஆசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம்.

மதுரங்க சுபசிங்க: ரி47 பிரிவு 400 மீ. 2021 பரா பஸா மெய்வல்லுநர் போட்டியில் வெள்ளிப் பதக்கம்.

குமுது ப்ரியன்கா: ரி45-46 பிரிவு 100 மீற்றர், நீளம் பாய்தல். ஜகார்த்தா 2018 பரா ஆசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம்.

சம்பத் பண்டார: வில்லாளர். பாங்கொக் 2019 பரா ஆசிய வில்லாளர் போட்டியில் தங்கப் பதக்கம்.

மஹேஷ் ஜயக்கொடி: படகோட்டம். டோக்கியோ 2021 பரா ரெகெட்டா ஆசிய கண்டப் போட்டியில் தங்கப் பதக்கம்.

ரஞ்சன் தர்மசேன: சக்கர இருக்கை டென்னிஸ். ஒற்றையர் பிரிவு. முதல் தடவையாக சர்வதேச போட்டியில் பங்குபற்றுகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'1வது ஆசிய Dueball சம்பியன்ஷிப் 2023'...

2023-12-10 20:55:27
news-image

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில்...

2023-12-09 10:07:46
news-image

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட்...

2023-12-09 10:08:28
news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2023-12-08 11:59:15
news-image

மும்பையில் 1வது ஆசிய Dueball சம்பியன்ஷிப்...

2023-12-08 23:48:39
news-image

ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை...

2023-12-07 12:14:41
news-image

விக்கெட்டை நோக்கி சென்ற பந்தை கையால்...

2023-12-06 14:47:13
news-image

ஆசிய கிண்ணப்போட்டிகளுக்காக19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட்...

2023-12-06 11:27:18
news-image

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவர் உபுல்தரங்க

2023-12-04 19:55:56
news-image

சென்னை புயல் ; தனது இரண்டாவது...

2023-12-04 15:45:59
news-image

மகளிருக்கான 'மேஜர் கிளப்' 50 ஓவர்...

2023-12-04 15:07:17
news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2023-12-01 16:52:21