(எம்.மனோசித்ரா)

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை உபகுழு தயாரித்துள்ள அறிக்கை நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

எனவே அறிக்கை தொடர்பில் நிதி அமைச்சு உள்ளிட்டவற்றின் மதிப்பீடுகளையும் பெற்று அடுத்த வாரம் அமைச்சரவையின் தீர்மானம் என்ன என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்துவோம் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.