(செய்திப்பிரிவு)

ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை  அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டவர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆவார்.

இலங்கை மக்கள் அனைவருக்கும் அவரவர் உரிமை கிடைக்கப்பெற வேண்டும் என்று போராடிய அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.

முன்னார் அமைச்சர் மங்கள சமரவீர குறித்து ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது :

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவிற்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மங்கள சமரவீர 40 வருட கால அரசியலில் மக்களுக்காக சேவையாற்றியுள்ளார். இவரது மறைவு இலங்கை அரசியலுக்கும், சிவில் அமைப்பிற்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மாத்தறை மாவட்டத்திற்கு மாத்திரமல்ல  நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள மக்களுக்காக  செயற்பாட்டு அரசியலில் ஈடுப்பட்டவர். பல தலைமுறையினர் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் நாட்டுக்காக சேவையாற்றியுள்ளார்.

ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை  அடிப்படையாக கொண்டு செயற்பட்டவர். இலங்கை மக்கள் அனைவருக்கும் அவரவர் உரிமை கிடைக்கப் பெற வேண்டும் என்று போராடினார்.

மக்கள் சேவையில் இவர் ஆளும் மற்றும் எதிர்;கட்சி பாராமல் ஒருமித்த வகையில் செயற்பட்டுள்ளார். இளம் தலைமுறையினரை அடிப்படையாகக் கொண்டு அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முயற்சித்தார்.

 ஐக்கிய தேசிய கட்சியின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என இருதரப்பிலும் ஒன்றினைந்து செயற்பட்டுள்ளார்.

நெருக்கடியான நிலையில் பிரச்சினைகளுக்கு  தீர்வு காண சிறந்தமுறையில் ஆலோசனை வழங்கியுள்ளார். இவரது மறைவு இலங்கை அரசியலுக்கும், சிவில் அமைப்பிற்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.