Published by T. Saranya on 2021-08-24 14:07:23
(எம்.மனோசித்ரா)
நாட்டில் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு நிதியுதவியை வழங்கவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அதற்கமைய 37.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகவும், 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாகவும், மொத்தமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.