அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அயராது செயற்பட்டவர் கௌரி சங்கரி - தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்

Published By: Digital Desk 3

24 Aug, 2021 | 01:31 PM
image

(எம்.நியூட்டன்)

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கடந்த காலங்களில் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்படுகின்ற தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலைக்காக மிக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்திருந்த சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி கௌரி சங்கரி தவராசாவின் திடீர் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளோம் என சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இவர் ஆரம்ப காலங்களில் தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை போன்ற முக்கியமானவர்களின் வழக்கு விவகாரங்களில், ஆட்சியாளர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல்களையும் மீறி துணிவோடு நீதிமன்றப்படி ஏறி வழக்காடிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.ரி.தவராசாவுக்கு எப்போதும் பக்க பலமாக நின்று சட்ட ஆலோசனைகள் உட்பட பல்வேறு வழிவகைகளிலும் உதவி வந்திருக்கின்றார்.

உயர்நீதிமன்றில் அரசமைப்பு தொடர்பான மிக முக்கிய வழக்குகளை முன்னின்று நெறிப்படுத்தியதன் ஊடாக தனது சட்டப்புலமையையும் வாதத்திறமையையும் இவர் பறைசாற்றி வந்திருந்தார்.

பிரதானமாக குடிமக்களின் அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு விடயங்களில் மிகுந்த கரிசனை கொண்டிருந்தார். மனித கடத்தல்கள், திட்டமிடப்பட்ட அரசியல் படுகொலைகள் போன்ற வழக்குகளுக்காக உயர்நீதிமன்றில் சட்டத்தரணிகள் குழுவோடு நின்று, அவற்றை நெறிப்படுத்தியதன் மூலம் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் பேசப்பட்ட பிரபல சட்டத்தரணி ஆவார்.

இவர் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகப் பல பணிகளை ஆற்றியுள்ளதுடன், நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தின் உயிர்ப்யையும் தக்கவைப்பதில் தனது சட்டத்துறை மூலம் முக்கிய வகிபாகத்தை செய்து வந்திருக்கின்றார்.

மேலும், குடியியல் வழக்குகள், பெண்களுக்கு எதிரான அத்துமீறல் செயற்பாடுகள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகி நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ஒருபோது பின்னின்றதில்லை. இவரின் திடீர் இழப்பு எமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்  என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22