அமைச்சரவை அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட்-19 நிதியத்திற்கு அன்பளிப்பு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கமைய, தற்போது நாட்டில் பரவி வரும் கொவிட் - 19 தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்குவதற்காகவும் கொவிட் நிதியத்தை வலுப்படுத்துவதற்காகவும் அமைச்சரவை அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை குறித்த நிதியத்திற்கு அன்பளிப்பு செய்வதற்கு அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.