கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தற்காலிகமாக முடக்க நேரிட்டமையால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000  ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தற்காலிகமாக முடக்க நேரிட்டமையால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000  ரூபா கொடுப்பனவு வழங்குவது உகந்ததென அடையாளங் காணப்பட்டுள்ளது. 

அதற்கமைய, தேவையான நிதி மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்படுவதுடன், குறித்த கொடுப்பனவுகள் பிரதேச செயலாளர்களால் தெரிவு  செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும். 

அதற்குத் தேவையான வழிகாட்டல்கள் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் வெளியிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, குறித்த கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்காக மாவட்டச் செயலாளர்களுக்கு தேவையான மேலதிக நிதியை விடுவிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.