பிரேசிலில் இடம்பெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இவர் 1.89 மீற்றர் உயரம் பாய்ந்த குறித்த தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் மற்றுமொரு வீரரான வருண் பட்டி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மாற்றுத்திரனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலின் ரியோவில் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.