2010 இல் கின்னஸ் உலக சாதனை மூலம் அமெரிக்காவில் உயரமான மனிதராக முடிசூட்டப்பட்ட இகோர் வோவ்கோவின்ஸ்கி, வெள்ளிக்கிழமை காலமானார் என்று அவரது தாயார் ஸ்வெட்லானா வோவ்கோவின்ஸ்கா தெரிவித்தார்.

Igor Vovkovinskiy, seen here September 12, 2009 at a rally led by Former President Barack Obama in Minnesota.

இறக்கும்போது அவருக்கு வயது 38.

கின்னஸின் கூற்றுப்படி, வோவ்கோவின்ஸ்கி 7 அடி, 8.33 அங்குல உயரம் உடையவர். 

வோவ்கோவின்ஸ்கி இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது தாயார் சனிக்கிழமையன்று பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

வோவ்கோவின்ஸ்கியின் மரணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவரது சகோதரரின் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டதாகவும், அவரது இறுதி இரவு நேர உணவை உண்டதாகவும் அவரது தாயார் பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.