ஸ்ரீதலதா பெரஹராவை பண்டைய மரபுகள் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஏற்ப இந்த ஆண்டும் நடத்தக் கிடைத்தமை அனைத்து பௌத்த மக்களுக்கும் மிகுந்த பக்திபூர்வமான மகிழ்ச்சியை அளிப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

May be an image of 2 people and people standing

தளதா பெரஹரா நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

நாட்டின் முன் எத்தகைய சவால்கள் மற்றும் தடைகள் இருந்தாலும் நாம் விட்டுக்கொடுக்க முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் எம்மிடம் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம்.

அதில் முதலாவது இடம் புனித தந்தத்துக்காக நடத்தப்படும் அர்ப்பணிக்கப்பட்ட புனித கிரியைகளுக்குச் சொந்தமானது என்பதை பழங்காலத்திலிருந்தே எமது ஆட்சியாளர்கள் நம்பினார்கள். அவர்கள் அந்தப் பாரம்பரியத்தை யுகம் யுகமாகப் பொறுப்பளித்தனர்.

May be an image of 4 people and people standing

பண்டைய மன்னர்கள் மற்றும் நாட்டின் புனித தந்தமானது, தேசத்தின் மகுடம் என்று நாம் பக்தியுடன் நினைவுகூர்கிறோம். பௌத்தர்களான நாம், புனித தந்தத்துக்கு கொடுக்கும் மரியாதை, புத்த பெருமானுக்கு வழங்கும் அளப்பரிய மரியாதையாகும். தொற்றுநோய் நிலைமைகள் இருந்த போதிலும், 1711ஆவது பெரஹரா நிகழ்வை நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் நடத்தி, எதிர்காலச் சந்ததியினருக்கு எமது கடந்தகாலப் பொறுப்புகளை எடுத்துக்காட்ட முடிந்தது.

May be an image of one or more people, people standing and outdoors

ஓர் அரசாங்கம் என்ற வகையில், கடந்தகால பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்த மகிழ்ச்சியை நாம் அடைகிறோம். எங்கள் மதிப்புக்குரிய மஹா சங்கத்தினரின் வழிகாட்டுதலுக்காகவும் பண்டைய மன்னர்களால் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியத்துக்காகவும், நாம் அனைவரும் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

May be an image of 2 people, people standing and indoor

புனித தந்ததாதுக்காகச் செய்யப்படும் அர்ப்பணிப்புகளை, நாட்டுக்காகவும் தேசத்துக்காகவும் செய்யும் அர்ப்பணிப்புகளாகவே நாங்கள் கருதுகிறோம். வரலாறு நெடுகிலும் நாடு எடுத்த ஒவ்வொரு வெற்றிகரமான நடவடிக்கையிலும், புனித தந்தத்தின் பாதுகாப்பு இருந்தது என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.