(எம்.ஆர்.எம்.வசீம்)
பலாங்கொடை பிரதேசத்தில் பெண் ஒருவரை ஏமாற்றி தங்க நகைகளை கொள்ளையடித்த குழுவினரில் கைது செய்யப்பட்டிருக்கும் நீர் மானி வாசிப்பவர் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழோ அல்லது சமூக குடிநீர் திணைக்களத்தின் கீழோ பணியாற்றுபவர் அல்ல என நீர்வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.
![]()
இதுதொடர்பாக அமைச்சின் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பலாங்கொடை, பம்பகின்ன பகுதியில் வீடொன்றில் வயது முதிர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றி அவரிடம் இருந்து 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்த குழுவினரை அண்மையில் சமநலவெவ பொலிசார் கைது செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஒருவர் நீர் மானி வாசிப்பாளராக இருந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நீர் மானி வாசிப்பாளர் நீர் வழங்கல் அமைச்சுக்கு கீழ் வரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழோ அல்லது சமூக குடிநீர் திணைக்களத்தின் கீழோ பணியாற்றுபவர் அல்ல.
குறித்த நபர் பலாங்கொடை, இம்புல்பே பிரதேச சபை ஊடாக அந்தப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் நீர் வழங்குவதற்காக செயற்படும் சிறிய கிராமிய நீர் திட்டமொன்றின் நீர் மானி வாசிப்பாளராகப் பணியாற்றும் இம்புல்பே பிரதேசசபையின் பணியாளர் ஒருவராவார்.
இலங்கை பூராகவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கீழ் இயங்கும் நீர் மானி வாசிப்பாளர்கள் பலநூறு பேர் காணப்படுவதனால், இந்த செய்தியை அடுத்து வீடுகளுக்குச் சென்று தமது கடமைகளை நிறைவேற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஒரு சில நீர் மானி வாசிப்பாளர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.
பல ஆண்டுகாலமாக இலட்சக்கணக்கான நீர் வாடிக்கையாளர்களுக்கு தமது கடமைகளை நிறைவேற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் மானி வாசிப்பாளர்கள், அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் நிரந்தர பணியாளர்கள் என்பதுடன் அவர்கள் தமது கடமைகளை மிகவும் பொறுப்புடன் மேற்கொள்கின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM