சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான யசுஷி ஆகா ஷியின் மதிப்புமிக்க பங்களிப்பை மறந்து விட முடியாது  - ஜீ.எல்.பீரிஸ்

Published By: Digital Desk 4

23 Aug, 2021 | 11:02 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் உள்நாட்டு போரின் போது ஜப்பான் அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராக சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது யசுஷி ஆகாஷியின் மதிப்புமிக்க பங்களிப்பை மறந்து விட முடியாது என தெரிவித்துள்ள வெளிவிகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், யதார்த்தங்களைப் புரிந்துகொண்டதற்காகவும்,  நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதற்காகவும் சர்வதேச அரங்கில் ஜப்பான் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.  

இலங்கைக்கான ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் மீண்டும் வலியுறுத்திய வெளிவிகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கை மற்றும் ஜப்பான் அனைத்து மட்டங்களிலும் சிறப்பான கூட்டாண்மைகளை பராமரித்து வருவதாகவும்குறிப்பிட்டார்.  

தொற்றுநோயால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் சரியான நேரத்தில் நிறைவு செய்யவும், வரவிருக்கும் திட்டங்களை செயற்படுத்துவதை துரிதப்படுத்தவும் ஜப்பான் உறுதிபூண்டுள்ளதாகவும் தூதுவர் சுகியாமா தெரிவித்தார்.

அனைத்து கடினமான காலங்களிலும் இலங்கைக்கு உறுதியான ஆதரவை வழங்கிய ஜப்பானிய அரசாங்கம் மற்றும் அதன் மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்த வெளிவிகார அமைச்சர் பீரிஸ் கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஜப்பான் இலங்கையின் மதிப்புமிக்க பங்காளியாகும் அதே வேளையில், ஜப்பானால் சமீபத்தில் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1.4 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகள் குறித்தும் நினைவுக்கூர்ந்தார்.

மேலும் ஜப்பான் அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராக சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது யசுஷி ஆகாஷியின் மதிப்புமிக்க பங்களிப்பை நினைவுகூர்ந்த அமைச்சர் பீரிஸ், இலங்கையின்  யதார்த்தங்களைப் புரிந்துகொண்டதற்காகவும்,  நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதற்காகவும் சர்வதேச அரங்கில் அதன் மத்தியஸ்தப் பங்களிப்பிற்காக நன்றிகளையும் தெரிவித்தார்.

இலங்கை - ஜப்பான் இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவை அடுத்த ஆண்டு  பொருத்தமான முறையில் கொண்டாடுவது குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தவும்ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்...

2026-09-11 09:48:26
news-image

'ஷிரான் பாசிக்கின் சகாவுக்குச் சொந்தமான 10...

2026-09-11 09:51:57
news-image

யோஷிதவுக்கு எதிரான வழக்கு : பொய்...

2026-09-11 09:33:27
news-image

புலத்சிங்கள பகுதியில் புதையல் தோண்டிய மூவர்...

2026-09-11 09:43:21
news-image

மஹியங்கனையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2026-09-11 09:43:29
news-image

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட ரூ.1,104 மில்லியன் பெறுமதியான...

2026-09-11 09:33:58
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: விசாரணைக்கு 03...

2026-09-11 08:56:14
news-image

தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல்: இரு பிள்ளைகள்...

2026-09-11 07:54:57
news-image

இன்றைய வானிலை

2026-09-11 06:26:29
news-image

2027ல் கடுமையான வறட்சி ஏற்படலாம்: நீர்...

2026-09-10 15:23:36
news-image

இலங்கை தொடர்பான இரகசிய ஒப்பந்தங்களை வெளிப்படுத்த...

2026-09-10 15:24:01
news-image

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புனித நீரைத்...

2026-09-10 15:24:49