இந்தியாவிற்கு நன்றி கூறியது அரசாங்கம்

Published By: Digital Desk 4

23 Aug, 2021 | 11:03 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 இலங்கைக்கு  140 மெற்றிக் தொன் ஒட்சிசன் சிலிண்டர்களை விரைவாக வழங்கியமைக்கு இந்திய பிரதமருக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒருபோதும் தவறாக அதிகாரத்தை பயன்படுத்தமாட்டார்”: பேராசிரியர் ஜி.  எஸ். பீறிஸ் | Virakesari.lk

இந்தியா இலங்கைக்கு நெருக்கடியான நிலையில் நட்பு நாடாகவும், அயல்நாடாகவும் உதவி செய்துள்ளதை மறக்க முடியாது.எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் வைரஸ் தாக்க்திற்கு மத்தியில் ஒக்சிசன் தேவையை பூர்த்தி செய்வதற்காக 100 மெற்றிக் தொன் ஒட்சிசன் சிலிண்டர்களுடன் நேற்று சக்தி கப்பலும், மேலும் 40 மெற்றிக் தொன் ஒட்சிசன் சிலிண்டர்களுடன்  இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பலும் இனறு  இலங்கைக்கு வந்தடைந்தன.

நெருக்கடியான நிலையில் குறுகிய நேரத்திற்குள்  ஒத்துழைப்பு வழங்கியதற்கு இலங்கை மக்கள் சார்பில்  இந்தியாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது அவசியமாகும்.

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான ஒக்சிசனை  பெற்றுக் கொள்வற்காக  இந்தியாவில் இருந்து பெறப்பட்ட ஒக்சிசன்களை   நாட்டுக்கு விரைவாக கொண்டு வருவதற்கான நவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிற்கு ஆலோசனை வழங்கினார். 

இதற்கமைய  இலங்கை மற்றும் இந்திய கடற்படையினரது உரிதகர செயற்பாட்டுடன் குறித்த ஒக்சிசன் சிலிண்டர்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 இலங்கை நெருக்கடியான சூழ்நிலையினை எதிர்க் கொள்ளும் போது இந்தியா அயல்நாடு என்ற ரீதியில் வரலாற்று  காலம் தொடக்கம் உதவி புரிந்துள்ளது. இந்த ஒத்துழைப்பினை தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும்,

வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்த வேளை இலங்கைக்கு இந்தியா வழங்கும் ஒத்துழைப்பிற்கு நன்றியை தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37