மாவனல்லை மயூரபாத மைதானத்தில் வைத்து இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மைதானத்தில் நேற்று (0 9) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் ஏற்பட்ட மோதலின் போதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில், மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதிலொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 24 வயதான இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.