(எம்.ஆர்.எம்.வசீம்)
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்திய சில தினங்களிலேயே கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே தடவையாக குறைவடையவில்லை என யாரும் சங்கடப்படவோ மனதளவில் பாதிக்கப்படவோ தேவையில்லை.
நாட்டை முடக்கியதன் பிரதிபலனை கண்டுகொள்வதற்கு குறைந்த பட்சம் இரண்டுவாரங்களாவது செல்லும் என ராகம வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுனத சில்வா தெரிவித்தார்.
அத்துடன் கொவிட் தடுப்பூசியை தெரிவுசெய்துகொண்டிருக்காமல் முதலில் கிடைக்கும் தடுப்பூசி சிறந்த தடுப்பூசி என நினைத்து பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.
கொவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முடக்கப்பட்டுள்ளபோதும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை என பலரும் தெரிவித்து வரும் கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் காலகட்டத்தில் மக்கள் தேவையாற்ற பயணங்களில் இருந்து தவிரந்து, தங்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கின்றேன்.
அதேபோன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அனைவரும் தற்போதுள்ள நிலைமையில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கொவிட் தொற்றாளர்கள் குறையவில்லை என யாரும் சங்கடப்படவோ அதுதொடர்பில் சிந்திக்கவோ தேவையில்லை. இந்த காலப்பகுதியில் இனம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கட்டுப்பாடற்ற பயணங்களின் பெறுபேறாகும்.
தற்போது நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் பெறுபேற்றை இன்னும் இரண்டு வாரங்களில் கண்டுகொள்ளலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM