(எம்.ஆர்.எம்.வசீம்)

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் புதிய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு நீதி அமைச்சர் அலி சப்ரியினால் ஆரம்பித்து வைப்பு

மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் புதிய இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் அலி சப்ரியினால் நீதி அமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிடுகையில்,

நாட்டின் அனைத்து சமூகங்களுக்கிடையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு அறிவிக்க இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. 

தேசிய ஒற்றுமையின் முக்கியத்துவமும் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் அது தேசிய பாதுகாப்பிற்கு பங்களிக்கும் ஒரு காரணியாகும் என்பதை புரிந்துகொண்டிருக்கும் இந்த அரசாங்கம், இந்த காரியாலயம் ஊடாக நாட்டு மக்களுக்கிடையில்  ஐக்கியத்தை விரிவாக்கச்செய்ய கிடைக்கும்  பங்களிப்பு குறித்து நாங்கள் ஆராரோக்கியமான எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றோம்.

இலங்கைக்குள் பல்வேறு சமூகங்கள் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் பல்வேறு மதங்களை பின்பற்றிக்கொண்டு சினேகபூர்வமாக இலங்கை பிரஜைகளாக வாழ்வதுடன் அந்த நிலைமையை மேலும் விரிவாக்குவாக்குதல் மற்றும் தொடர்ந்து கொண்டுசெல்லுதல் தொடர்பான தகவல்களை மக்களுக்கு மத்தியில் கொண்டுசெல்லுதல் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் புதிய இணையத்தளத்தை மக்கள் மயாமாக்குவதன் மூலம் எதிர்ப்பாக்கின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி குஷான் தஅல்விஸ், அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்  சட்டத்தரணி ஜனக்க ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.