சதீஷ் கிருஷ்ணபிள்ளை    

ஒருபடை வருகிறது. நாட்டை ஆக்கிரமிக்கிறது. எல்லாவற்றையும் மாற்றுவோம் என்கிறது. 20ஆண்டுகளில்எதுவுமே மாறவில்லை. 

உள்ளிருந்துமீண்டுமொரு படை வருகிறது. அதிகாரத்தைக் கைப்பற்றுகிறது. புதிய முகம் காட்டுகிறது. நாம்மாறி விட்டோம், நம்புங்கள் என்று சொல்ல எத்தனிக்கிறது. 

 இந்தநாட்டில் வாழ்பவர்கள் பெரும் துரதிஷ்டக்காரர்கள். ஆரம்பத்தில் இருந்தவன் அநியாயம் செய்தான்.அவனை விரட்டியடிப்பதற்காக வந்தவன், அதை விடவும் அட்டூழியம் செய்து சென்றான். இப்போதுஆரம்பத்தில் இருந்தவன் மீண்டும் வந்து, தன்னை நம்பச் சொல்கிறான்.

 வெளியில்இருந்து வந்தவன் எக்கேடு கெட்டாவது போகட்டும். புதிய முகம் காட்டுபவனை எங்கனம் நம்புவது?அவன் உண்மையைத் தான் பேசுகிறானா? தன்னுள் மறைந்திருக்கும் அரக்க குணம் மறைக்க நடிக்கிறானா?

 அமெரிக்கப்படைகளின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, தலிபான்கள் காட்டும் புதிய முகம் பற்றி ஆப்கான்மக்கள் மனதில் தோன்றும் கேள்விகளாக உள்ளன. 

 ஆப்கான்மக்கள் இன்னமும் துரதிஷ்டம் பிடித்தவர்களாக இருப்பதற்கு காரணம், தலிபான்களின் ஆட்சியில்தாம் அனுபவித்த கொடுமை பற்றிய ஞாபகங்கள்.

 1996இல்தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை ஆப்கான் மக்கள் மறக்கவில்லை. ஷரீஆ கோட்பாடுகளுக்குதாமே அர்த்தம் கொடுத்து, அதன் அடிப்படையிலான சட்டங்கள் என்ற பெயரில் கட்டவிழ்த்த அராஜகங்களும்இன்னமும் மனதில் நிழலாடும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-08-22#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.