ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தெமட்டக்கொட மேம்பாலத்திலிருந்து பொரளை சந்திவரை பாதை மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை ஆண்டு நிறைவு விழா இடம்பெறும்  கெம்பல் பார்க் மைதானத்திற்கு செல்லும் புஞ்சி பொரளை மற்றும் ஓவல் மைதானத்திற்கு அருகிலுள்ள வீதிகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதிகள் ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா நிறைவுபெறும் வரை குறித்த வீதிகள் மூடப்பட்டிருக்கும் எனவும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.