சடலங்கள் வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கிறதா? - விஷேட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் நியமனம்

Published By: Digital Desk 3

23 Aug, 2021 | 09:03 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்போரின் சடலங்கள் வைத்தியசாலைகளில் குவிந்து கிடப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ள நிலையில்,  அது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க பிரதான ஐந்து வைத்தியசாலைகளுக்கு பொறுப்பாக செயற்பட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ  தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை,  களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை,  களுத்துறை வைத்தியசாலை, ராகம கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை மற்றும் பாணந்துறை வைத்தியசாலை ஆகியவற்றின் தகவல்கள் தொடர்பில் தேடிப் பார்த்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவே பொறுப்பாக இவ்வாறு பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் குறிப்பிட்டார்.

கொவிட் நிலைமையால் உயிரிழப்போரின் சடலங்கள் மேல் மாகாண வைத்தியசாலைகளில் ஆங்காங்கே கிடப்பதாக தகவல்கள் வெளியானபோதும் அவை பொய்யானது என தெரிவித்த பொலிஸ் பேச்சாளர்,  வைத்தியசாலைகளின் பொலிஸ் காவலரண் அதிகாரிகள் ஊடாக இது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதர்காக குறித்த பொலிஸ் அத்தியட்சரை நியமித்துள்ளதாக கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55