மாத்­தளை புதிய கச்­சே­ரியின் அத்­தி­பா­ரத்தை அமைக்க வெட்­டிய குழியில் மீட்கப்பட்ட 149 துப்­பாக்­கிகளையும் இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்த தீர்­மானம்

Published By: Priyatharshan

10 Sep, 2016 | 10:13 AM
image

மாத்­தளை புதிய மாவட்ட காரி­யா­லயம் (கச்­சேரி) தொடர்­பி­லான கட்­டடத் தொகு­தியை நிர்­மா­ணிப்பதற்கான அத்­தி­பாரம் அமைக்க வெட்­டப்­பட்ட குழியில் இருந்து 149 துப்பாக்­கிகள் மீட்­கப்பட்­டுள்­ளன. இந் நிலையில் இது குறித்து மாத்­தளை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சுஹந்­த­பா­லவின் மேற்­பார்­வையில் மாத்­தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அபேயசுந்தரவின் கீழான சிறப்புக் குழுவால் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

பெக்கோ இயந்­தி­ரங்­களைப் பயன்­ப­டுத்தி அத்­தி­பாரம் இடு­வ­தற்­கான குழிகள் வெட்டும் பணி இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த போது நேற்று நண்­பகல் 12 மணி­ய­ளவில் இந்த துப்­பாக்­கிகள் கிடைத்­துள்­ளன. இத­னை­ய­டுத்து அது தொடர்பில் மாத்­தளை பொலி­ஸா­ருக்கு தகவல் அளிக்­கப்பட்­டுள்ள நிலை­யி­லேயே இது குறித்த மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

மீட்­கப்பட்ட இந்த துப்பாக்கிகள் அனைத்தும் துருப்­பி­டித்து உக்கிப் போகி­யி­ருந்த நிலையில் அவற்றை மாத்­தளை நீதிவான் எஸ்.பி.எச்.எம். சேசிரி ஹேரத் ஸ்தலத்­துக்கு சென்று அவ­த­னித்தார். நீதி­வானின் உத்­தரவுக்கு அமைய நேற்று அந்த ஆயு­தங்கள் அரச இர­சா­யன பகுப்­பாய்­வு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன.

இவ்­வாறு புதைக்­கப்பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்பட்ட ஆயுத தொகை­களில் தனி குழல் துப்­பாக்­கிகள் 137, இரட்டைக் குழல் துப்பாக்கிகள் 6 மற்றும் 6 ரிவோல்வர் பாகங்­களும் இருந்­த­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரி­வித்தார்.

முன்­ன­தாக மாத்­தளை வைத்­தி­ய­சா­லையின் கட்­டட அமைப்­புக்­காக இவ்­வாறு அத்­தி­வார குழிகள் தோண்­டப்­படும் போது பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் புதைக்­கப்பட்­ட­தாக நம்­பப்­படும் மனித எலும்புக் கூடுகள் பல மீட்­கப்பட்­டன. அது தொடர்பில் விசா­ரணை இன்னும் நிறை­வு­றாத நிலையில், நேற்று மாத்­தளை புதிய கச்­சே­ரிக்­காக தோண்­டப்­பட்ட குழியில் இருந்து ஆயு­தங்கள் மீட்­கப்­பட்­டுள்ளன.

எவ்­வா­றா­யினும் நேற்று மீட்­கப்பட்ட ஆயுத தொகை எந்த விதத்­திலும் புராண வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த தொல் பொரு­ளாக இருக்க வாய்ப்பே இல்லை என விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான அதி­கா­ரிகள் சுட்­டிக்­காட்­டினர்.

1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற கல­வ­ரத்தின் போதும் 1988–1989 ஆம் ஆண்டுகளின் கல­வ­ரத்தின் போதும் மாத்­தளை மாவட்­டத்தில் கடு­மை­யான மோதல்கள் பதி­வா­கி­யி­ருந்­தன.

இந்த இரு கல­வ­ரங்­களின் போதும் அருகில் இருக்கும் பொலிஸ் நிலை­யத்­துக்கும் அரச நிறு­வ­னங்­க­ளுக்கும் ஆயு­தங்­களைக் கைய­ளிக்க உத்­தரவி­டப்பட்­டி­ருந்­தது. அதன்­படி ஒப்­ப­டைக்­கப்பட்ட ஆயு­தங்­களா இவ்­வாறு மீட்­கப்­பட்­டவை என்­பது குறித்தும் விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04