(எம்.மனோசித்ரா)
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் ஏனையோரை விட தொற்றுக்கு உள்ளாகும் வீதம் 9 மடங்கு அதிகமாகும் என்று ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசியை புறக்கணிக்கக் கூடாது. எவ்வாறிருப்பினும் தடுப்பூசி வழங்குவது மாத்திரமே இதற்கான வழிமுறை அல்ல என்பதால் 3 வாரங்களுக்கேனும் நாடு முடக்கப்பட வேண்டும்.
முடக்கம் குறித்த தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று தொற்று நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
60 வயதுக்கு மேற்பட்டோரில் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களையும் , ஒரு தடுப்பூசியைக் கூட பெறாதோரையும் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் ஒரு தடுப்பூசியையேனும் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டோர் ஏனையோரை விட தொற்றுக்குள்ளாகும் வீதம் 9 மடங்கு அதிகமாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே 60 வயதுக்கு மேற்பட்டோர் தாமதிக்காமல் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
எவ்வாறிருப்பினும் தடுப்பூசியைப் பெறுவது மாத்திரமே இதற்கான தீர்வு அல்ல. எனவே 3 வாரங்களாகவு நாடு முடக்கப்பட வேண்டும்.
அதன் ஊடாக 10 நாட்களின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை , மரணங்களின் எண்ணிக்கை மற்றும் தொற்று பரவும் வீதம் என்பவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM