எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கருத்து வெளியிட்டு கைதான ஆனந்த பாலித்தவுக்கு பிணை

Published By: Digital Desk 4

22 Aug, 2021 | 09:12 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தேசிய ஊழியர் சங்கத்தின் பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளையின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

2016 மார்ச் 31 இல் இடம்பெற்ற பிணை முறி மோசடி : பிரதிவாதிகளுக்கு எதிரான  வழக்கு செப்டம்பர் 2 இல் விசாரணைக்கு | Virakesari.lk

போலியான விடயங்களை சமூக மயபப்டுத்திய குற்றச்சாட்டடில் அவரை நேற்று இரவு, வத்தளை, சிங்ஹ வீதி பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சி.ஐ.டி.யினர் கைது செய்தனர். 

இந்நிலையில் இன்று நண்பகல் அவரை சி.ஐ.டி.யினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்த போது அவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல கொழும்பு மேலதிக நீதிவான்  லோச்சனீ அபேவிக்ரம அனுமதியளித்தார்.

கடந்த 19 ஆம் திகதி  ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி,  நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடொன்று உள்ளதாக பொய்யான தகவலை சமூக மயப்படுத்தியதாக கூறி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் ஒருவர் சி.ஐ.டி.யிடம் முன் வைத்த முறைப்பாடு தொடர்பிலேயே ஆனந்த பாலித்தவை கைது செய்ததாக அவரை நீதிமன்றில் ஆஜர் செய்து விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

 குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் 65 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலும், 32 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுமே கையிருப்பில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த கையிருப்பானது 11 நாட்களுக்கே போதுமானது என அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் இது தொடர்பில் சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில், கடந்த 19 ஆம் திகதியாகும் போது,  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் 71 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோலும்,99 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலும்  கையிருப்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

அத்துடன் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக நாளாந்தம் சுத்திகரிக்கப்படும் டீசல், பெற்றோலும் கையிருப்பில் உள்ளதாகவும் அதன்படி  செப்டெம்பர் மாதம் வரையில் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனையடுத்தே, பொய்யான விடயங்களை சமூக மயப்படுத்திய குற்றச்சாட்டில் ஆனந்த பாலித்த சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் ஆனந்த பலைத்த சார்பில் முன் வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை ஏற்ற நீதிவான் அவருக்கு பிணையளித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-11-09 06:02:04
news-image

ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்...

2025-11-08 17:03:53
news-image

6 வருடங்களாக  மலசலகழிவுகளை அகற்றும் வாகனம்...

2025-11-08 20:32:03
news-image

வரவு - செலவு திட்டத்தில் பாரிய...

2025-11-08 13:51:57
news-image

இலங்கையின் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை வெளிக்கொணரும் ”FOOTPRINT”...

2025-11-08 16:26:12
news-image

தாதியர் கல்லூரிகளில் விரிவுரையாளர் பற்றாக்குறை: உடனடியாக...

2025-11-08 15:34:19
news-image

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-11-08 16:05:19
news-image

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து - மூவர்...

2025-11-08 17:09:32
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-08 17:03:03
news-image

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ; சந்தேக...

2025-11-08 16:46:04
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

2025-11-08 14:08:13
news-image

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான வாகனங்கள் கைப்பற்றல்!

2025-11-08 15:57:05