வவுனியாவில் கொரோனா தொற்றால் இன்று  மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர்.

Articles Tagged Under: கொரோனா தொற்று | Virakesari.lk

வவுனியா மதவுவைத்தகுளம் கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிப்பிகுளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் இன்று (22) மரணமடைந்தார்.

அவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

இதேவேளை வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த  ஒருவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அவர் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளார்.