(இராஜதுரை ஹஷான்)

 நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும்  எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில், திறக்கப்படும். மொத்த விற்பனைக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆகவே விவசாயிகள் அச்சம்கொள்ள தேவையில்லை என  விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மஹிந்தானந்த அளுத்கமகே மீது வழக்குத் தாக்கல் | Virakesari.lk

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால்  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

 ஆகவே சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும்  திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை நடவடிக்கையினை மாத்திரம் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.