இலங்கையில் முதல்முறையாக ATM இயந்திரத்தைத் தொடாமல் பணம் மீளப்பெறும் வசதியை அறிமுகப்படுத்திய சம்பத் வங்கி

Published By: Digital Desk 2

22 Aug, 2021 | 01:52 PM
image

இலங்கைக்கு முதன்முதலாக ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்தியிருந்த வங்கியிலிருந்து மற்றொரு முதல்முறையான புத்தாக்கம். தொற்றுநோய் நிலைமையின் போது இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பாதுகாப்பாக பணத்தை மீளப் பெறலாம். 

 சம்பத் வங்கி இலங்கையில் முதன்முறையாகவும், குறிப்பாக பிராந்தியத்தில் முதல் முறையாகவும் அமைய வாய்ப்புள்ளதாக, தன்னியக்க டெலர் இயந்திரங்களில் (ATM) அவற்றைத் தொடாமல் பணத்தை மீளப்பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.

நிதி, மூலதனச் சந்தை அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் சம்பத் வங்கி தலைமை அலுவலக வளாகத்தில் இந்த சேவையை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளார். 

சம்பத் வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவரான ஹர்ஷ அமரசேகர, சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரான நந்த பெர்னாண்டோ, சம்பத் வங்கியின் குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரியான அஜித் சல்காது, மற்றும் சம்பத் வங்கியின் சர்வதேச வாணிபம் மற்றும் கடன் கட்டுப்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளரான அயோத்ய இதவெல ஆகியோர் முன்னிலையில் அவர் இயந்திரத்தை தொடாமல் பணத்தை மீளப்பெறும் முதலாவது பரிவர்த்தனையை மேற்கொண்டார்.

சம்பத் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் நாட்டின் ஏனைய அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் சம்பத் wepay  செயலியைப் பயன்படுத்தி ATM திரையில் காண்பிக்கப்படும் பொது விரைவுத் தகவல் குறியீட்டை (QR ) ஸ்கேன் செய்வதன் மூலம் நாடு முழுவதும் உள்ள எந்த சம்பத் வங்கி ஏடிஎம் மூலமாகவும் தங்கள் கணக்குகள் மற்றும் அட்டைகளில் உள்ள நிதியை மீளப் பெற முடியும்.

ATM இன்  மேற்பரப்பை உடல் ரீதியாகத் தொடும் தேவையை நீக்கி, இது அபாயத்தைக் குறைக்கவும் வாடிக்கையாளர் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோய் நிலைமையின் போது ATM  களில் இருந்து பணத்தை மீளப் பெறுவதற்கான சிறந்த வழியாகும்.

இது சம்பத் வங்கியால் இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட மற்றொரு முன்னோடியான டிஜிட்டல் தீர்வு. 1988 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் பன்முக-மைய ஏடிஎம் வலையமைப்பின் அறிமுகம் அடங்கலாக சம்பத் வங்கி அதன் தொடக்கத்திலிருந்தே பல புத்தாக்கங்களை சந்தையில் அறிமுகம் செய்து வந்துள்ளது.

 

இந்நிகழ்வு குறித்து நிதி, மூலதனச் சந்தை அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “தொற்றுநோய் பரவி வருகின்ற இக்காலப்பகுதியில், எமது பிரஜைகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற நிலையில், நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளினதும் வாடிக்கையாளர்கள் பணத்தை மீளப்பெறுவதை பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்கு இடமளிக்கும் காலத்தின் தேவையான ஒரு புத்தாக்கமாக, இயந்திரத்தைத் தொடாமல் பணத்தை மீளப்பெறும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ள சம்பத் வங்கிக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். பிராந்தியத்திலேயே அனேகமாக இதுவே முதன்முறையாக இத்தகைய ஒரு தீர்வாக அமைய வாய்ப்புள்ளதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறாயின் உண்மையிலேயே நாம் அனைவரும் பெருமைப்படவேண்டிய ஒரு நிகழ்வாகும் என்பதில் ஐயமில்லை. இந்த உலகளாவிய சுகாதாரம் மற்றும் நிதியியல் நெருக்கடி ஏற்படுத்தியுள்ள சவால்களை நாம் முறியடிக்க உதவுவதற்கு ஒருமித்த தேசமாக இத்தகைய புத்தாக்கமான தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கு தொடர்ந்தும் உழைப்போம்,” என்று குறிப்பிட்டார்.

 

“நாங்கள் மிகவும் புத்தாக்கமான டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகளை உருவாக்கி அறிமுகப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், சில பரிவர்த்தனைகளுக்கு பணத்தை மீளப் பெறுவதற்கான தேவை எப்போதும் இருக்கும் என்ற உண்மையை நாங்கள் அறிவோம். இதை கருத்தில் கொண்டு, தொடுகையின்றி பணத்தை மீளப் பெறுவதன் மூலம் எங்களின் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான பாதுகாப்பான, தொடுகை இல்லாத வழிமுறையை அறிமுகப்படுத்துவது எங்கள் பாக்கியம். இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் இத்தகைய முதல் தீர்வு இதுவாக மாறியுள்ளது,” என்று சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரான நந்த பெர்னாண்டோ அவர்கள் கூறினார்.

“சம்பத் வங்கி வாடிக்கையாளர்களும் மற்றும் நாட்டின் ஏனைய அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இனி ஏடிஎம் மேற்பரப்பை தொடாமல், சம்பத் wepay  செயலியைப் பயன்படுத்தி ஏடிஎம் திரையில் பொது விரைவுத் தகவல் குறியீட்டை (QR ) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தங்கள் பணத்தை மீளப் பெற முடியும். அனைத்து இலங்கை மக்களும் தங்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் அட்டைகளிலிருந்து, குறிப்பாக இந்த உலகளாவிய தொற்றுநோய் நிலைமையின் போது, பணத்தை மீளப்பெறும் போது சம்பத் wepay  மூலம் இயந்திரத்தைத் தொடாமல் பணத்தை மீளப் பெறும் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தைப் பயன்படுத்துமாறு அழைக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

எந்தவொரு சம்பத் வங்கி ஏடிஎம் இலும் இயந்திரத்தைத் தொடாமல் பணத்தை மீளப்பெற, அவர்கள் சம்பத் wepay  செயலியில் ஞசு ஐத் தேர்ந்தெடுத்து, ஏடிஎம் திரையில் காண்பிக்கப்படும் தனித்துவமான QR  குறியீட்டை ஸ்கேன் செய்து, மீளப்பெறும் தொகையை உள்ளிட்டு, பணத்தை மீளப்பெறுகின்ற  கணக்கு அல்லது அட்டையைத் தேர்ந்தெடுக்கவும். வாடிக்கையாளரின் அங்கீகாரத்தின் பிரகாரம் அவரது கோரிக்கையை இந்த கட்டமைப்பு நடைமுறைப்படுத்துகிறது. தொடர்புடைய கணக்கு அல்லது அட்டைக்கணக்கில் பற்று வைத்து, ஏடிஎம் மூலம் கோரப்பட்ட பணத்தை கிட்டத்தட்ட உடனடியாக பெற்றுக்கொள்ள வழிவகுக்கின்றது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனித்துவமான QR  குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டியது அவசியம் ஆகையால், வாடிக்கையாளர் ஏடிஎம் மையத்திற்குச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. இதனால் கூடுதல் பாதுகாப்பும் உள்ளது. 0112303050 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பயனர்கள் இயந்திரத்தைத் தொடாமல் பணத்தை மீளப்பெறுவது தொடர்பான மேலதிக தகவல் விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.

 

சம்பத் wepay  என்பது அனைத்தையும் ஒருங்கே கொண்டுள்ள டிஜிட்டல் பணப்பை ஆகும். Just  Pay  வசதி கொண்ட உள்நாட்டு வங்கிகளுடனான அனைத்து வகையான நிதியியல் பரிவர்த்தனைகளையும் பயனர்கள் இதன் மூலமாக நிகழ்நேரத்தில் இணைய பரிவர்த்தனைகளாக மேற்கொள்ள முடியும். Social Share  - சமூக வலைப்பின்னல் அடிப்படையிலான நிதிப் பரிமாற்றங்கள், QR  அடிப்படையிலான கொடுப்பனவுகள், சம்பத் வங்கி மற்றும் மூன்றாம் தரப்பு நிதிப் பரிமாற்றங்கள், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் பலவற்றை மேற்கொள்ள இடமளிப்பதுடன், மிகவும் பரவலாக பிரபலமடைந்துள்ள இச்செயலி பயனர்களை தொடுகை இன்றிய கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு இடமளித்து, அதன் மூலம் தொற்றுநோய் பரவுகின்ற காலகட்டத்தில் தொற்று ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்கிறது.

 

சம்பத் WePay  செயலியை Apple App Store, Google Play Store kw;Wk; Huawei AppGallery ஆகியவற்றின் மூலமாக இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயனர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை விபரங்களை உள்ளிட்டு, தாங்களாகவே இதில் பதிவு செய்து, தங்கள் சம்பத் வங்கி அல்லது வேறு எந்த வங்கியின் கணக்கு, கடனட்டை அல்லது டெபிட் அட்டை விபரங்களை உள்ளிடுவதன் மூலம் செயலியில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம். மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சம்பத் வங்கி ஏடிஎம்களில் Touch Cash Withdrawals பணம் மீளப்பெறும் வசதியைப் பயன்படுத்த, வாடிக்கையாளர் தகவல் திரட்டு (Know Your Customer - KYC)சம்பிரதாயங்களை பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் சம்பத் றுநீயல பணப்பைகளை மீள்நிரப்ப வேண்டும். சம்பத் வங்கி சம்பத் WePay  க்கு வருடாந்த கட்டணம், தரகுப்பணம் அல்லது பரிவர்த்தனை கட்டணம் எதனையும் அறவிடாது.

100மூ உள்நாட்டு வங்கியாகத் திகழ்ந்து வரும் சம்பத் வங்கியானது இலங்கை மக்களின் வாழ்வில் ஆழமாக வேரூன்றியுள்ளது. 1987 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த வங்கி ஒரு அதிநவீன நிதி நிறுவனமாக மாறியுள்ளதுடன், அதன் தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் வணிகத்தில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் பலனாக இன்றும் சந்தையில் முன்னிலை வகிக்கும் வங்கியாக தொடர்ந்தும் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. சம்பத் வங்கி செயல்பட ஆரம்பித்ததிலிருந்து ‘வங்கித்துறையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ள’ பல புத்தாக்கங்களின் வரிசையில் ஏடிஎம் எந்திரங்கள், நீடிக்கப்பட்ட வங்கிச்சேவை நேரம் மற்றும் படிவமின்றிய வங்கிச்சேவை என பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். எமது பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களைக் கட்டிக்காத்தவாறு தொழில்நுட்பத்தால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற நிதியியல் சேவைகள் வழங்குனராக தன்னை சீராக வளர்ச்சி காணச் செய்து வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

NBEA 2026 இல் ஒட்டுமொத்த சிறப்புக்கான...

2026-08-14 12:00:47
news-image

இலங்கையின் முன்னணி உணவுத் துறை கண்காட்சியான...

2026-08-14 10:51:37
news-image

RCGC இல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக...

2026-08-13 17:43:14
news-image

2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக...

2026-08-09 17:16:46
news-image

காலியில் தனது புதிய மாபெரும் காட்சியறை...

2026-08-07 16:09:58
news-image

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத்...

2026-08-05 16:33:53
news-image

கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog...

2026-08-04 17:03:02
news-image

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை...

2026-08-03 14:55:49
news-image

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை...

2026-08-03 14:46:29
news-image

வளர்ச்சிக்கு முன்னுரிமை: சிலோன் மோட்டார் வாகன...

2026-08-02 14:27:26
news-image

2026ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க...

2026-07-30 19:23:39
news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44