2022 பெப்ரவரி வரை  குறைந்த விலையில் எரிபொருளை வழங்கலாம் - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு

Published By: Digital Desk 2

22 Aug, 2021 | 01:37 PM
image

இராஜதுரை ஹஷான்

உலக சந்தையில் எரிபொருளின்  விலை சடுதியாக குறைவடைந்துள்ள காரணத்தினால் தேசிய மட்டத்தில் எரிபொருளின்  விலையை குறைக்க எரிபொருளின் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும். 

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை எரிபொருளின் விலையை குறைந்தளவில் பேணுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது என சுட்டிக்காட்டி நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு நிதியமைச்சர்பஷில் ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

 அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த மாதம் 11 ஆம் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை  அதிகரிக்கப்பட்ட போது  உலக சந்தையில் எரிபொருள்தாங்கியின் விலை சுமார் 70.91 டொலராக காணப்பட்டதுடன், கடந்த மாதம் 30 ஆம் திகதி எரிபொருள் தாங்கியின் விலை 73.95 டொலராக காணப்பட்டது. 

இதன் பின்னர் உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக குறைவடைந்தது.

இதற்கமைய ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்உலக சந்தையில் எரிபொருள் ஒரு தாங்கியின் விலை 62.14  அமெரிக்க டொலராக காணப்பட்டது. 

தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை திருத்தப்பட்டதை தொடர்ந்து , உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்த வரையிலான காலப்பகுதியில் எரிபொருளின் விலை  8.77 அமெரிக்க டொலரினால் குறைவடைந்துள்ளது.இதனால் 12 சதவீத இலாபம் கிடைக்கப் பெற்றுள்ளனஎனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54