வரலாற்று சிறப்புமிக்க கண்டி, எசல பெரஹரவில் பிரம்மாண்டமான ரந்தோலி பெரஹராவின்  வீதி உலா இன்று நடைபெறுகிறது.

ஊர்வலம் கண்டி வீதிகளல் மாலை 6:44 மணிக்கு செல்லும்.

இன்றைய ஊர்வலத்தில் நடுங்கமுவ ராஜா உட்பட சுமார் 100 யானைகள் பங்கேற்க உள்ளன.

தண்ணீர் வெட்டும் விழா மற்றும் ஊர்வலம் நாளை நடைபெறும், அதன்பிறகு இந்த ஆண்டின் கண்டி எசல பெரஹர வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று அறிவிக்கும் நிருபம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். 

கடந்த 09 ஆம் திகதி ஆரம்பமான எசல பெரஹர, நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.