இலங்கை அணியின் சகலதுறை வீரர் திலகரட்ன டில்ஷான் இன்று (09) தனது இறுதி சர்வதேச கிரிக்கட் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

டெஸ்ட் போட்டியிலிருந்து  20013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில், அவுஸ்திரேலியாவுடன் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியுடன்  டில்ஷான் தனது ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் இன்று ஆஸி அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் டில்ஷான்.

இந்த போட்டியில் டில்ஷானின் அதிரடியை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து, தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்தவண்ணம் உள்ளனர்.