எம்.மனோசித்ரா

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் உருவாகிய கொவிட் பரவல் மூன்றாம் அலை தற்போது பாரிய ஆபாய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் அலை உருவானதையடுத்து முழு நாடும் முடக்கப்பட்டுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

வெள்ளியன்று பிற்பகல் முடக்கம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பிரதான நகர் பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முண்டியடித்தமையால் பல பகுதிகளிலும் பாரிய மக்கள் கூட்டத்தை அவதானிக்க முடிந்தது. எனினும் இன்று சனிக்கிழமை சன நடமாட்டம் முற்றாகக் குறைவடைந்திருந்தது.

இதன் போது பேரூந்து மற்றும் புகையிரதம் உள்ளிட்ட எவ்வித பொது போக்குவரத்துக்களும் சேவையில் ஈடுபடவில்லை.

எனினும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் தொழில்நிமித்தம் செல்லும் வாகனங்கள் மாத்திரம் பிரதான வீதிகளில் பயணித்தன.