உலகப் புகழ்பெற்ற ஜம்மு - காஷ்மீரின் குங்குமப்பூவை சந்தைப்படுத்தும் பொறுப்பினை இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு  முன்னெடுத்து வருகின்றது.

இந்த நடவடிக்கையினால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்பதுடன்  காஷ்மீர் குங்குமப்பூவின் வாசனையை உலகம் முழுவதும் பரவும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாகின்றது.

குங்குமப்பூவை சந்தைப்படுத்துவது குறித்து இந்திய தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு  அறிவித்ததன் பின்னர் , ஜம்மு - காஷ்மீரின் ஆளுநர் மனோஜ் சின்ஹா, குங்குமப்பூ உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும என்று  நம்பிக்கை வெளியிட்டார்.

தரவுகளின்படி 1997 முதல் 2010 , 2011 வரை காஷ்மீரில் குங்குமப்பூ உற்பத்தி வீழ்ச்சி கண்டிருந்தது. 1996 மற்றும் 1997  ஆண்டு காலப்பகுதியில் 5707 ஹெக்டேரில் இருந்து  குங்குமப்பூ உற்பத்திகள் 2010 மற்றும் 2011  ஆண்டு ஆகுகையில் 3785 ஹெக்டேராகக் வீழ்ச்சிக்கண்டது. 

சந்தை வாய்ப்பு இன்மை  மற்றும் விலை சரிவு மற்றும் ஊக்குவித்தல் என்பன இன்மையே இந்த சரிவுகளுக்கு பிரதான காரணமாகியது.

இதனால் விவசாய சமூகம் பாரியளவில் பாதிக்கப்பட்டதுடன் துன்பங்களையும் எதிர்க்கொண்டனர். இவ்வாறானதொரு நிலையில்  இந்திய அரசு, 2010 -2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேசிய குங்குமப்பூ இலக்கு  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

  

இந்த திட்டத்தின் ஊடாக  குங்குமப்பூ உற்பத்தியை ஊக்குவித்தல் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தப்பட்டது.  ஆனால் அது மந்தமாக காணப்பட்டது.  காஷ்மீர் மக்கள் குங்குமப்பூ பயிரிட மரபுவழி முறைகளைப் பின்பற்றினர். இதனால் குங்குமப்பூவை அறுவடை மற்றும் பயிரிடல் என்பவற்றிக்கு 2 வருடங்கள் வரை சென்றன.

2014 ல் இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம், உற்பத்தியின் பெரும் பகுதியை அழித்து விட்டது. காஷ்மீரின் குறிப்பாக பாம்பூர் பகுதி மாத்திரமே உற்பத்திக்கு சாதகமான சூழலை கொண்டிருந்தது.

இதனை தொடர்ந்து காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் பாம்போர் பகுதியில் ரூ .24.54 கோடி மதிப்பிலான குங்குமப்பூ பூங்கா திட்டத்திற்கு  அப்போதைய இந்திய மத்திய விவசாய அமைச்சர் ராதா மோகன் சிங் அடிக்கல் நாட்டினார்.

ஜம்மு - காஷ்மீர் குங்குமப்பூ துறையின் பொருளாதார மறுமலர்ச்சி திட்டத்தை ஒரு இலக்கு முறையாக கொண்டு செயல்படுத்தப்படுவதாக அடிக்கல் நாட்டிய பின்னர் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.  

எவ்வாறாயினும் தற்போது காஷ்மீரின் குங்குமப்பூ உற்பத்தியாளர்களின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. குங்குமப்பூ திட்டத்தின் கீழ் முயற்சிகளால் உற்பத்திகள் புத்துயிர் பெற்றுள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். புதிய தொழில்நுட்பம் மற்றும் ஊக்குவிப்புகள் விவசாயிகளுக்கு  சிறந்த வகையில் பயனளிக்கிறது.

குங்குமப்பூ வளர்ப்பவர் ஒரு முன்னர் கிலோவுக்கு 90,000 ரூபா முதல் ஒரு இலட்சம் அல்லது 1.1 இலட்சம் பெற்றார். ஆனால் தற்போது குங்குமப்பூ பூங்காவை உருவாக்குவதன் மூலம் அவர்கள் ஒரு கிலோவுக்கு  2.25 இலட்சம் அல்லது ரூ 2.3 இலட்சம்  வரை பெறுகின்றனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கு 2022 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் வருமானம் 2021 இல் இரட்டிப்பாகியுள்ளது.