கடனட்டை, வங்கி அட்டைகள் ஊடாக டொலர் கட்டணத்தை செலுத்தத் தடை  - வியாபாரிகள் கவலை  

By Digital Desk 2

21 Aug, 2021 | 06:45 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

இலங்கையில் கடனட்டை (கிரெடிட் கார்ட்) மற்றும் வங்கி அட்டைகளை பயன்படுத்தி இணையத்தளத்தின் ஊடாக டொலர் மூலமாக கட்டணம் செலுத்துவதை கடந்த புதன்கிழமை முதல் (18) ‍‍ வரையறுத்துள்ளதாக இலங்கை வியாரிகள் மற்றும் அத்துறையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்துகொண்டு இலங்கையிலுள்ள  வங்கி அட்டைகளை பயன்படுத்தும் பலர் இதனால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தமது நாளாந்த வர்த்தக நடவடிக்கைகளை செயற்படுத்த முடியாது தவித்து வருவதாக பாதிப்புக்குள்ளானோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் வினவியபோது,

"நாட்டில் டொலர் கையிருப்பு மிகவும் குறைந்தளவில் காணப்படுவதுடன், டொலர் வெளிநாடுக‍ளுக்குச் பரிமாற்றமாவதை தடுப்பதற்காகவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது  " எனத்  தெரிவிக்கின்றன.

இந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு வேறு  ஏதேனும் மாற்று முறையை கடைப்பிடிக்குமாறு வங்கிகள் கூறுகின்றன. எனினும், அந்த மாற்று முறை என்ன என்பதை குறிப்பிடாது இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right