வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அடுத்த வாரம் முதல் 2 ஆயிரம் ரூபாவை வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவாக வழங்கவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.