சில மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2019 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2123/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், மருத்துவ உபகரணங்களின் விலைகளும் திருத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு 60 வகையான மருந்துப்பொருட்களுக்கும் நான்கு வகையான வைத்திய உபகரணங்களுக்கும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.