க.கிஷாந்தன்
நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்துள்ளது.
நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போலீசார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்பட முற்பட்ட சிலர், பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அத்துடன், முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
மலையக நகர் பகுதி இவ்வாறு முடக்கப்பட்டிருந்தாலும் தோட்டப்பகுதிகளில் இயல்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலைக்குச்சென்றமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM