யாழ் மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் போதியளவு கையிருப்பில் உள்ளதாகவும், பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும்  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்து எரிபொருள் நிரப்புவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவின்படி தேவையான எரிபொருள் போதியளவு  கையிருப்பில் உள்ளதாகவும் பொதுமக்கள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சமடைய தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.