(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று சனிக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் 186 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இது வரையில் 55 842 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவை தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் வாகனங்கள் பிரவேசிக்கின்ற 12 இடங்களில் 735 வாகனங்களும் அவற்றில் பயணித்த 1261 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேற அல்லது மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட 191 வாகனங்களில் பயணித்த 471 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும் பொலிஸாரின் சோதனைகளின் பின்னர் 787 வாகனங்களில் பயணித்த 1437 பேருக்கு மேல் மாகாணத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.