அம்பேபுஸ்ஸ - குருணாகல் வீதியில் நான்கல்ல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவத்தில்  படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர்  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

அலவ்வ, புஜ்ஜொமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.  விபத்து தொடர்பாக வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.