அனைத்து நாடுகளுடனும் இலங்கை நட்புறவுடன் செயற்படும் - நிதி அமைச்சர் பஷில் இராஜதந்திரிகளிடம் தெரிவிப்பு

By Gayathri

20 Aug, 2021 | 02:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஒருமித்த வெளிவிவகார கொள்கைக்கு அமைய இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படும். 

கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது வரவேற்கத்தக்கது என  நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நோர்வே, துருக்கி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களிடம் குறிப்பிட்டார்.

நோர்வே, துருக்கி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கும், நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு  நிதியமைச்சில் இடம்பெற்றது.

நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்பட்டன.

புதுப்பிக்கத்தக்க சக்தி வலு தொடர்பில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக நோர்வே தூதுவர்  ஹில்ட்பேர்க்- ஹன்சென் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மட்டத்தில் இதற்கு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

கொவிட் -19 வைரஸ் தாக்கம் ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டவுடன், துருக்கி நாட்டின்  வியாபாரா கவுன்சில் பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

இலங்கையின் தேயிலை உற்பத்திக்கு தமது நாட்டில் உயர் மட்டத்தில் கேள்வி காணப்படுவதாகவும்,  இதனை தொடர்ந்து மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும்  துருக்கி தூதுவர் ஆர். டெமெற் செகர்சியோக்லு நிதியமைச்சரிடம் குறிப்பிட்டார்.

கொவிட் தாக்கத்துக்கு மத்தியிலும் இலங்கையின் தைத்த ஆடைகள்  பெருமளவில்  இத்தாலிக்கு  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

இலங்கையின் ஆடை உற்பத்திகளுக்கு தமது நாட்டு சந்தையில் அதிகளவில் கேள்வி காணப்படுவதாகவும், சந்தை வாய்ப்பினை விரிவுப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.

இத்தாலி நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலாபிரயாணங்களை மேற்கொள்ள அதிகளவில் ஆர்வமாக உள்ளார்கள். 

ஆகவே இத்தாலிக்கும், இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது அவசியமாகும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இத்தாலி தூதுவர் ரிற்றா ஜியுலியானா மனெலா  நிதியமைச்சரிடம் வலியுறுத்தினார்.

அனைத்து நாடுகளுடனும் இலங்கை ஒருமித்த வெளிவிவகார கொள்கைக்கு அமைய செயற்படும்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் இலங்கையுடன் தொடர்புக்கொண்டு பல்துறை செயற்பாடுகளிலும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது என நிதியமைச்சர் இச்சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் யாழில்...

2022-11-28 10:19:37
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09
news-image

வட, கிழக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம்...

2022-11-27 20:41:22
news-image

இன்னும் 6 மாதங்கள் இடமளியுங்கள் -...

2022-11-27 18:20:50