கொவிட் தொற்றுக்கு மத்தியில் மார்பக், எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ள மே. ஆபிரிக்கா

Published By: Vishnu

20 Aug, 2021 | 12:32 PM
image

கொவிட்-19 நோய்க்கு மத்தியில் மேற்கு ஆபிரிக்கா தற்சமயம் மார்பக் மற்றும் எபோலா தொற்றின் புதிய வெடிப்புகளை எதிர்கொள்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

WHO data shows that West Africa in the past month recorded the highest number of COVID-19 deaths since the pandemic began [File: Sunday Alamba/AP Photo]

ஆபிரிக்காவின் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய பணிப்பாளர் மாட்ஷிடிசோ மொய்தி வியாழக்கிழமை இந்த தகவலை உறுதிபடுத்தினார்.

மேற்கு ஆபிரிக்க நாடான கோட் டிவார் திங்களன்று வணிக தலைநகரான அபிட்ஜானில் எபோலாவுக்கு எதிராக சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை ஆரம்பித்துள்ளது.

1994 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை கோட் டிவாரில் முதல் எபோலா தொற்று அறிவிக்கப்பட்டது.

அண்டை நாடான கினி குடியரசிலிருந்து பயணம் செய்த 18 வயது சிறுமியே தொற்றுக்குள்ளானவர் என கோட் டிவார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் கினி குடியரசிலுள்ள சுகாதார அதிகாரிகள் எபோலாவைப் போன்ற ஒரு மர்பர்க் வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்தாக உறுதி செய்தனர்.

ஏனைய பிராந்தியங்களை விட ஆபிரிக்கா ஒவ்வொரு ஆண்டும் அதிக தொற்று நோய் வெடிப்புகளை எதிர்கொள்கிறது. குறிப்பாக மேற்கு ஆபிரிக்காவின் சுகாதார அமைப்புகள் கண்டத்தின் மற்ற பகுதிகளை விட பலவீனமாக உள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதத்தில் மேற்கு ஆபிரிக்கா கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கொவிட் -19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

மேலும் கோட் டிவார், கினியா மற்றும் நைஜீரியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், மார்பக் மற்றும் எபோலா போன்ற புதிய தொற்றுகளுக்கும் முகங்கொடுத்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெயினில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து...

2026-02-17 16:02:25
news-image

பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட...

2026-02-17 14:39:32
news-image

லண்டனில் தீவிரமாக பரவி வரும் அம்மை...

2026-02-17 12:46:45
news-image

சீனாவில் பட்டாசு கடையில் வெடி விபத்து...

2026-02-16 17:30:07
news-image

நியூசிலாந்தில் சூறாவளி ; போக்குவரத்து பாதிப்பு...

2026-02-16 15:59:58
news-image

இந்திய பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேலுக்கு...

2026-02-16 15:21:04
news-image

ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம்...

2026-02-16 14:24:59
news-image

நைஜீரியாவில் 3 கிராமங்களுக்குள் நுழைந்த கும்பல்...

2026-02-16 13:35:05
news-image

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத...

2026-02-16 10:02:06
news-image

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம்...

2026-02-15 15:42:16
news-image

ரஷ்யாவில் வட்ஸ்அப் செயலிக்கு தடை 

2026-02-15 11:17:58
news-image

பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ;...

2026-02-15 11:24:12