இரத்மலானை மற்றும் மடிவெல பகுதிகளில் 4.7 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரு சந்தேக நபர்களும் களுத்துறை மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

‍கைதான சந்தேக நபர்கள் களுத்துறை மற்றும் மடிவெல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களில் ஒருவர் களுத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் செப்டெம்பர் 1 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மற்றைய நபர் 200,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.