பாணின் விலையை வேறுவழியின்றியே அதிகரிக்கின்றோம் - பேக்கரி உரிமையாளர் சங்கம்

20 Aug, 2021 | 07:01 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினோம். 

ஆனால் இதுவரையில் எவ்வித நிவாரணமும் கிடைக்கப்பெறவில்லை. எனவே வேறுவழியின்றி  விலைகளை அதிகரிக்கின்றோம் என  பேக்கரி உரிமையாளர்  சங்கத்தின்  தலைவர்  என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாணின் விலை  5 ரூபாவினாலும்,ரோஸ்பாண், பணிஸ், கிம்புலா பணிஸ்,  மாலுபாண் ஆகிய உணவு பொருட்கள்  10 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் கேக் 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

சீனி  ஒரு கிலோ கிராம் 37.5 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது ,சமையல் எரிவாயுவின் விலை  சடுதியாக அதிகரித்துள்ளது.

 இவ்விரு பொருட்களின் விலைகளும் கடந்த இரு மாத காலத்திற்குள் சுமார் 900 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பேக்கரி உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பேக்கரி உற்பத்தியாளர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

நெருக்கடியான நிலையில் விலை அதிகரிக்காமல் பேக்கரி உற்பத்தியை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது. 

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினோம். 

ஆனால் இதுவரையில் எவ்வித நிவாரணமும் கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாகவே  அனைத்து உணவு பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56