(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பாராட்டிற்கு பின்னால் பாரிய ஆபத்தான பொறி இலங்கைக்கு காத்திருக்கின்றது. ஐ நா உள்ளக தகவல்களின் பிரகாரம் போர்குற்ற விசாரணைக்கான நீதி சபையை ஆரம்பிப்பதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

செயலாளர் நாயகம் பான் கீ மூன் பதவி காலம் முடிவடைய இன்னும் மூன்று மாத காலம் இருக்கின்ற நிலையில், அவர் விலகுவதற்கு முன்னர் இலங்கைக்கு எதிரான போர் குற்ற விசாரணை நீதி சபையை பரிந்துரை செய்வார். ஆழம் தெரியாமல் அரசாங்கம் மௌனித்து செல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் லண்டனில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்தார் . இதன் போது இலங்கையின் தற்போதைய முன்னேற்றகரமான மாற்றங்களை வரவேற்றுள்ளார்.  இது குறித்து தெளிவுப்படுத்துகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல  மேற்கண்டவாறு தெரிவித்தார்.