நாட்டில் இன்றைய தினம் 2,720 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் இலங்கையில் உறுதிபடுத்தப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 372,079 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளான 2,186 நோயாளர்கள் புரண குணமடைந்து வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களை விட்டு வெளியேறியதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிபடுத்தியது.

இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 318,714 ஆக அதிகரித்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 46,761கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.